மதுரை : கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தலைமையால் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் மதுரை மாவட்ட திட்டக் குழு உறுப்பினராக சோழவந்தான் பேரூர் தி.மு.க செயலாளரும் பேரூராட்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலருமாண வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளா. இதனை தொடர்ந்து சோழவந்தானில் உள்ள தி.மு.கவினர் அவரை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்து வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் கூறும்போது கட்சி தலைமை என் மீது வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அயராது பாடுபடுவேன் என்றும் தொடர்ந்து சோழவந்தான் பேரூராட்சியில் திமுகவின் வளர்ச்சிக்கு கடினமாக உழைப்பேன் என்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் திமுகவிற்கு அதிகமான வாக்குகள் பெற்றுத் தருவேன் என்றும் கூறினார் தொடர்ந்து கட்சியினர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி