திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ்நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், ரூ.7,500 அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேலு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 5 கடைகளில் பார்சல் மடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பைகள் என 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.7,500 அபராதமும் விதித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி