இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை மருத்துவமனையில் சந்தித்து குழந்தையின் தாயாரிடம் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மாவட்ட செயலாளர் மாண்புமிகு எம். ஏ. முனியசாமி அவர்கள், மற்றும் அ.இ அ.தி.மு.க சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பி.ஆர். செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் கேட்டறிந்து உங்கள் போராட்டத்திற்கு அ.தி.மு.க என்றும் துணை நிற்கும் என உறுதி அளித்தனர். உடன் கழக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் மாண்புமிகு கே. சி. ஆனிமுத்து அவர்கள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மரியாதைக்குரிய ஏ.சரவணகுமார் அவர்கள், கடலாடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மரியாதைக்குரிய சரவணன் அவர்கள் ஆகிய அனைவரும் உங்களுக்கு தேவையான அனைத்தையும் நிவர்த்தி செய்து தருகிறோம் உறுதியுடன் கூறினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி