மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வைகை அக்ரோ தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதன் இயக்குனர் குணசேகரன் ஏற்பாட்டில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள், மற்றும் பெண்கள் என தனித்தனியே நவீன கழிப்பறை வசதி கட்டி தரப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு ரூ.1லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் டிவி வழங்கி அதனை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி கருப்பணன், தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெசிந்தா, பள்ளி தலைமை ஆசிரியர் காளிஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள், வைகை அக்ரோ நிறுவன பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி