சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிவுற்று ஜுலை 22ம் தேதி காலை 11.00 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு அங்கீகரிக்கப்பட்ட தேசிய / மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுவதை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் இ.ஆ.ப, அவர்கள் ஆய்வு செய்தார்கள், சிவகங்கை உதவி ஆணையர் (ஆயம்), தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் காரைக்குடி / சிவகங்கை/ இளையான்குடி மற்றும் வனத்திட்ட அலுவலர், சிவகங்கை கோட்ட ஆய அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி