சிவகங்கை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, ரூ.17.52 கோடி மதிப்பீட்டில் 8681 புதியதாக தெருவிருக்குகள் பொருத்தும் பணி துவக்க விழா மற்றும் 4475 சோடியம் ஆவி விளக்குகளை புதிய led விளக்குகளாக மாற்றும் பணிகளை (27/07/23), மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் க.செல்வராஜ் MLA அவர்கள் துவக்கி வைத்தனர். மேலும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் நொய்யல் ஆற்றில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் மற்றும் தந்தை பெரியார் நகர் பகுதியில் ரூ.2.86 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு. நாகராசன் அவர்களும், மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் அவர்களும், மாநகராட்சி ஆணையர் பவன் குமார், ஜி. கிரியப்பனவர் அவர்களும், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட, மாநகர,பகுதி, வட்ட கழக செயலாளர்களும், நிர்வாகிகளும் , அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி