மதுரை : பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை என்.மண். என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு வருகை தந்தார். காரியாபட்டியில், பள்ளத்துப்பட்டி, என்.ஜி ஓ.நகர், கள்ளிக்குடி ரோடு, மெயின்ரோடு வழியாக சென்று பொதுமக்களை சந்தித்தார். கிராமிய கலைஞர்கள், பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டம், பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். காரியாபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ .க தலைவர் அண்ணாமலை பேசும்போது விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சுழி தொகுதி மிகவும் புண்ணிய வாய்ந்த பகுதியாகும். திருச்சுழி ரமணர் மகரிஷி பிறந்த ஊர், காசி, ராமேஸ்வரம் கோவிலுக்கு ஈடான திருமேனிநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் தேவர், மருதுபாண்டியர்கள் வாழ்ந்த பூமி இத்தனை பெருமை வாய்ந்த திருச்சுழி தொகுதி மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கி கிடக்கிறது.
மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தில் மிகவும் வறட்சியான பின் தங்கிய மாவட்டமாக விருதுநகர் அறிவிக்கப்பட்டது. இதை அடிப்படை கொண்டு, விருதுநகர் மாவட்டத்தின வளர்ச்சிக்கு மத்திய அரசு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்துகிறது. ஆனால், ஆளுங்கட்சியான தி.மு.க அரசு மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்வதில் அக்கறை காட்டவில்லை 2018 ம் ஆண்டு முதல் மத்திய கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களால் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், தொகுதி மேலிட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் , மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் விஜய் ரகுநாதன், ஒன்றியத் தலைவர் ராஜபாண்டி, பா.ஜ.க ஊடக பிரிவு, மாவட்டத் தலைவர் செல்வக்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி