விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 26 கிராம ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை. அந்த வகையில் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் பணிபுரிந்து வந்த கிராம ஊராட்சி செயலர்களும் அதிரடி பணியிட மாற்றம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு அதன்படி பள்ளிமடம், நல்லாங்குளம், இருஞ்சிறை, வேளானேரி, V. கரிசல்குளம், திம்மாபுரம், எழுவணி மற்றும் பிள்ளையார்குளம் ஆகிய ஊராட்சி செயலர்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள், ஊழல் தடுப்பு பிரிவிற்கு வரப்பெற்ற புகார் மனுக்கள், ஊராட்சி மன்றத்தலைவர்களின் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி பணியிட மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முனியாண்டி