விருதுநகர் : கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க சேர்மன் பஞ்சவர்ணம் மீது வாக்கெடுப்பை தொடர்ந்து சேர்மன் பதவியிலிருந்து நீக்கம். சேர்மன் பதவி காலியானதை அடுத்து நரிக்குடி ஒன்றிய நிர்வாக நலன் கருதி துணை சேர்மனான ரவிச்சந்திரன் பொறுப்பு சேர்மனாக செயல்பட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அனுமதியளித்து உத்தரவிட்டதை அடுத்து பொறுப்பு சேர்மன் பொறுப்பேற்பு. வருகின்ற 23 ஆம் தேதி அதாவது நாளை சேர்மன் தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவிப்பு. பொறுப்பு சேர்மனா? புதிய சேர்மனா? நாளை பலப்பரீட்சை. மொத்தம் 14 கவுன்சிலர்கள் அ.தி.மு.க 6, தி.மு.க 6, சுயேட்சை, அ.ம.மு.க தலா 1.சேர்மன் தேர்தல் நடைபெற 8 கவுன்சிலர்கள்(பகுதிக்கு மேல் ) தேவை. கடந்த முறை அ.தி.மு.க சேர்மனை (ஆதிதிராவிடர் ) அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட 12 பேர் வாக்களித்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் 2 வது மற்றும் 11 வது வார்டு கவுன்சிலர்கள் கடும் அதிருப்தி. நாளை நடைபெறும் சேர்மன் தேர்தலில் அதிருப்தி கவுன்சிலர்களும் கலந்துகொள்ள இருப்பதாக வந்த தகவலையடுத்து சேர்மன் தேர்தல் சூடு பிடித்துள்ளது. சேர்மன் தேர்தலை அ.தி.மு.க புறக்கணிக்கிறதென கூறப்படும் நிலையில் அதிருப்தி கவுன்சிலர்கள் நாளை சேர்மன் தேர்தலில் பங்கேற்பதாக தகவல். நரிக்குடி ஒன்றிய சேர்மன் தேர்தலில் தி.மு.க வென்றால் விருதுநகர் மாவட்டம் தி.மு.க கோட்டையாகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சனைக்காக நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிப்பு.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது