சிவகங்கை : மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித். இ.ஆ.ப., அவர்கள் , டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப்பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடத்திட அரசால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இ.சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை இரசீதுகள் கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள் ஒப்புகை இரசீதுடன் கூடிய இணைய வழி விண்ணப்பத்துடனும், (18). வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளும், வைப்புத்தொகை பத்திர நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு முகப்புப் புத்தக நகல். பயனாளியின் (தாய் மற்றும் மகள்) இரண்டு வண்ணப்புகைப்படம் (Passport size -2 Photos) ஆகிய உரிய சான்றுகளுடன், மேற்குறிப்பிட்ட தினங்களில் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இச்சிறப்பு முகாம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு, 91500 57749 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித். இ.ஆ.ப., அவர்கள், தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி