திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி BDO ஆபிஸ் அருகே உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, மாணவியர் விடுதிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். சமையலறை, மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவினை சாப்பிட்டும், குடிநீர், கழிவறை உள்ளிட்டவற்றை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விடுதியில் தங்கியுள்ள மாணவ – மாணவிகளிடம் அமைச்சர் கயல்விழி கலந்துரையாடி விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அருகில் பொன்னேரி வட்டாட்சியர் மதி, பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி ,மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மொழிப்போர் தியாகி கா.சு.ஜெகதீசன் ,பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ் உதயன் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கவிதா சங்கர், பரிமளா அருண்குமார், ரஜினி, குமாரி புகழேந்தி, ஜெயலக்ஷ்மி தன்ராஜ், நக்கீரன் ,பாஸ்கர், அபூபக்கர், சங்கீதா சேகர், ஜெயலட்சுமி ஜெயசங்கர், மோனிகா ராஜேஷ், ஜோதிலட்சுமி மோகன், சுகன்யா வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் மீஞ்சூர் முன்னாள் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் பா.து. தமிழரசன், பழவேற்காடு கன்னிமுத்து, அசோகன், சிறுவாக்கம் சங்கர், வயலூர் செம்மொழி தாஸ், வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபி, நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜ், ஜோசப்,ஜோதி ஸ்ரீதர், முப்புராஜ், எழிலரசன், ஐயப்பன், திருப்பதி, நந்தியம் கார்த்திக், செங்கழுநீர் மேடு வழக்கறிஞர் பிரபாகரன், அனுப்பம்பட்டு தேவராஜ், மெரட்டூர் நேதாஜி ,ஆண்ட்ரூஸ், குரு சாலமன் , விடுதியின் பாதுகாவலர்கள் தி.மு.க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு