சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் மீனாள் தலைசிறந்த மருத்துவராகவும், மனிதநேயம் மிக்கவராகவும் இருந்துவந்தார். இவருக்கு பணி நிறைவு காலம் வந்ததையொட்டி, அதற்கான ஆணையை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் , மருத்துவர். மீனாள் அவர்களிடம் வழங்கினார். நேற்று (31.08.2023) அன்று கல்லூரி வளாகத்தில் பிரிவுபச்சார பாராட்டு விழா சிறப்புற நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், மருத்துவர் மீனாள் அவர்களின், சேவையினை பாராட்டி வாழ்த்தினர் .
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி