புதுடில்லி: மத்திய அரசின் பணியாளர் நலத்துறையின் குழு புதிய அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன்படி, வரும் ஜனவரியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தும் பொறுப்பில் இருந்த தமிழக தொழில்துறை செயலாளராக இருக்கும் கிருஷ்ணன், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் மின்னணுவியல் அமைச்சக செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியான நீரஜ் மிட்டல் மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.