மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம், காளியம்மன் கோவில் பகுதியில் பேவர் பிளாக் அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, காளியம்மன் கோவில் பகுதியில் மழைநீர் தேங்கா வண்ணம் பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தப் பகுதியில், தண்ணீர் தேங்குவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் அவல நிலையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வாகனங்களும் மிகுந்த சிரமத்தில் சென்று வந்தன. இதனை கருத்தில் கொண்டு, இப்பகுதி பொதுமக்கள் காளியம்மன் கோவில் பகுதியில் மெயின் ரோடு வரை பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது சம்பந்தமாக, ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற த்தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன், துணைத் தலைவர் சாமி சித்தாண்டி, ஊராட்சி செயலர் விக்னேஷ் உடனடி நடவடிக்கையாக அரசு பொறியாளரை அழைத்து அந்தப் பகுதியில் உள்ள இடத்தை பேவர் பிளாக் அமைக்கும் நோக்கில் அளவீடு செய்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணியை துவக்கிய, ஊராட்சி மன்ற நிர்வாகத்தினை பொதுமக்கள் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர் . மேலும், விரைவில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் அதற்குள்ளாக பேவர் பிளாக் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி