மதுரை: சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற சோழவந்தான் பிரளயநாத(சிவன்)கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது .சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. எம்.வி.எம் குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன்,மற்றும் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது .பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்புஅர்ச்சனை, பூஜைகள், தீபாரதனை நடந்தது. பிரதோஷ கமிட்டினர் பிரசாதம் வழங்கினர்.
இதே போல, மதுரை அண்ணா நகர், தாசிலா நகர், சித்தி விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர் ஆலயம் ,சௌபாக் விநாயகர் ஆலயம், ஞான சித்தி விநாயகர் ஆலயம், மற்றும் திருமங்கலம் மீனாட்சி சுந்தரே திருக்கோவில், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரே திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் மீனாட்சி நந்திகேஸ்வரனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி