மதுரை : மதுரை விமான நிலையத்தில், ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கழிவறை மற்றும் குப்பைத் தொட்டியில் கைப்பற்றிய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர். சந்தேகத்தின் பேரில் இலங்கைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அந்த விமானத்தில், தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர் துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் இடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் .
அப்போது தங்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை .இதனையடுத்து, விமானத்தின் உள்பகுதியிலும் கழிவறை பகுதி மேலும், சோதனைகளில் ஈடுபட்டனர் .
அப்போது, கழிவறை எண் 7 தங்கத்தை பேஸ்ட் களிமண் கொண்ட கலவையில் ஒரு கிலோ 124 கிராம் கைப்பற்றப்பட்டது. மேலும், அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் 800 கிராம் மதிப்புள்ள தங்க களிமண் பேஸ்ட் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் உள்ள சி.சி.டிவி காட்ச்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கழிவறை பகுதிக்கு சென்ற இலங்கையை சேர்ந்த இரண்டு பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனாலும் , கழிவறையில் ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 924 கிராம் தங்கத்தை களிமண்ணில் மறைத்து வைத்து மர்ம நபர்கள் போட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து, மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் விசாரணை மேற்கொண்டதில் துபாயில் இருந்து மதுரை வழியாக இலங்கை செல்ல இருந்த பயணி இருவர் என்பது தெரிய வந்தது. சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினில் விசாரணையில் இலங்கைப் பயணிகள் இருவர் துபாயில் இருந்து மதுரை வந்து மதுரையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்கின்றனர். எனவே ,தங்கத்தை கைப்பற்றி இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதாலும் அவர்கள் மீது இந்தியாவில் வழக்கு பதிய முடியாது என்பதால் அவர்கள் குறித்து தகவல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. பயணிகள் இருவரும் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட தங்கம் ஒரு கிலோ 924 கிராம் இந்திய சந்தை மதிப்பில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் என தெரிகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி