மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில், 44 கோடி மதிப்பில் 66 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானம் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிகட்டு விளையாட்டுப் போட்டிகளை, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த நிகழ்வுகளை, மேலும் மிகைப்படுத்தி உலக அளவில் மென்மேலும் பிரபலப்படுத்தும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து, தற்போது ஜல்லிக்கட்டு கலையரங்கம் இங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கலையரங்க மைதானத்தில் காளைகளுக்கான மருத்துவ வசதி, மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர்கள் தங்கும் வசதி பார்வையாளர் அதிகளவில் அமர்ந்து பார்க்கக் கூடிய பார்வையாளர் மாடம், ஜல்லிக்கட்டு குறித்த பழமை கலாச்சாரம் பாதுகாக்கும், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து, நீட் தேர்வு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அமைச்சர்
கூறியதாவது. மாணவர்கள் பாதிக்காத வகையில் நீட் தேவை ரத்து செய்வதற்காக ஆளுநரிடம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருமுறை சட்ட மசோதாவாக நிறைவேற்றி நேரில் சென்று வழங்கிய போதும் அதை நிராகரிக்கும் விதமாக ஆளுநர் மென்மேலும் காலம் தாழ்த்தி வருகிறார். தமிழ்நாட்டில், மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை உலக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடியதால்ஜல்லிக்கட்டுக்கு நல்ல முடிவு கிடைத்தது. அதே போல் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றால், அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து புரட்சி ஏற்படவேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து அதை நாம் முன்னெடுத்துச் சென்றால் தான் நீட் தேர்வு ரத்து செய்ய முடியும் மக்கள் மாணவர்களுக்காக, புரட்சியாக மாறினால் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வைரத்து செய்ய முடியும் .கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தரக்கூடிய தண்ணீரை நீதிமன்ற உத்தரவு படி பெற்று தருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முழு முயற்சியும் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி