திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக் அடங்கிய அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஓம் மகா மாயா சக்தி கோவிலில் புரட்டாசி திருக்குடை உற்ச்சவம் நடைபெற்றது. இன்று அத்திப்பட்டு ஊராட்சி எல்லையில் இருந்து ஓம் மகா மாயா சக்தி கோவிலில் அருள் பாலிக்கும் அருள்மிகு கோவிந்த வரதராஜ பெருமாள் சுவாமி திருக்குடைகளுடன் வீதி உலா வருகையில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பெருந்தலைவர் காமராஜரின் பேரன் கே. காமராஜ், விவசாயிகளின் சட்ட இயக்கம் நிறுவனர் அசோக் ,ஜி லோதா திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.நகர் செல்வம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணை தலைவர் எம். டி .ஜி கதிர்வேல், ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஓம் மகா மாயா சக்தி கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறப்பாக செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு