திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த டாக்டர் அம்பேத்கர் நகரில் உறவு அறக்கட்டளை சமூக மேம்பாட்டு நிறுவனத்திற்கான திறப்பு விழா நடைபெற்றது. அதன் இயக்குனர் சி. எம்.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி சமூக வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் எனும் கையெழுத்து பிரச்சாரத்தில் கையெழுத்திட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறவு அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்த பிரதியினை வெளியிட்டார். பின்னர் சமூக வளர்ச்சிக்காக தான் பணியாற்றும் செயல் குறித்தும் இது போன்ற சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள் எவ்வாறு மக்கள் பணியாற்றுவது என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், சமூக ஆர்வலர்கள் பழவை முகம்மது அலவி, அத்திப்பட்டு சௌரிராஜன், கையூம், ஒன்றிய கவுன்சிலர்கள் எம். கே.தமின்சா, செல்வழகி எர்ணாவூரான், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோட்டைக் குப்பம் சம்பத், லைட் ஹவுஸ் கஜேந்திரன், தாங்கல் பெரும்பலம் ஞானவேல், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் பி.எல் சி.ரவி, ஜலம்,குப்பன் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன், உறவு அறக்கட்டளை நிர்வாகிகள் சூசைராஜ், சைமன் டேவிட், சேக்தாவூத், கர்ணா மூர்த்தி, செந்தில், முத்து, மாஸ்டர் ஞானசேகர், மஞ்சு, வேளாங்கண்ணி மற்றும் பழவேற்காடு பகுதியில் உள்ள கிராம நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு