திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் பேருர் கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பதற்கு ஆலோசனை கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மீஞ்சூர் பேரூராட்சியை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர் பூத் கமிட்டி உறுப்பினருக்கு பூத் வாரியாக உறுப்பினர் படிவம் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. அப்போது பேசிய திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பலராமன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விடியா ஆட்சியின் அவல நிலையை மக்களிடம் விளக்கி அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளரை வெற்றி அடைய கழக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சி மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன், துணை செயலாளர் தமிழரசன், அவை தலைவர் மாரி டாக்டர் விஜயராவ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு