மதுரை : பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்படி, பேரூராட்சி உதவி இயக்குநர், மற்றும் மாவட்ட
ஆட்சித்தலைவர் ஆலோசனையின்படி, மதுரை மண்டல பேரூராட்சிகளின் இயக்கம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பாக, கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளிலிருந்து கழிவுநீரை இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகள் பற்றி கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் வாடிப்பட்டி ஜான்சி மஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு, பேரூராட்சித் தலைவர் மு. பால்பாண்டியன் தலைமை தாங்கி, தொடக்கிவைத்தார். துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயல்அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். இந்த முகாமில், நவீன முறையில் பாதுகாப்பாக கழிவுநீர்களை சுத்தம் செய்யும் முறை பற்றி தூய்மை இந்தியா திட்ட முதன்மைபயிற்றுநர் ராம்குமார், சுகாதார பணிஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் பயிற்சியளித்தனர். மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரூராட்சி செயல் அலுவலர்கள், 18 சுகாதாரபணி மேற்பார்வையாளர்கள், கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில், சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி