விருதுநகர் : உலக முதியோர் தினத்தை முன்னிட்டு , காரியாபட்டி எஸ் .பி .எம் டிரஸ்ட் மற்றும் மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் இணைந்து காரியாபட்டி எஸ் .பி. எம். மருத்துவமனையில் முதியோர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது . இம் முகாமுக்கு,
பேரூராட்சி சேர்மன் ஆர். கே செந்தில் தலைமை தாங்கினார் .ஜெயா ராஜகோபால் , பேரூராட்சி துணை சேர்மன் ரூபி சந்தோசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
எஸ். பி. எம். அறக்கட்டளை நிறுவனர் எம் அழகர்சாமி வரவேற்றார் .முகாமில், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் கிஷோர் ஜெயந்தி , பொது மருத்துவர் டாக்டர் ஹரிஷ் ஆகியோர் சுபா 100-க்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை ( ரத்த அளவு , ரத்தத்தில் உப்பின் அளவு , சர்க்கரை அளவு மற்றும் ஏனைய பரிசோதனைகள் ) செய்து இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினர். காவல்துறை சார்பு ஆய்வாளர் பிச்சை பாண்டி , ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் , கட்டுமான தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எஸ் .பி.எம் . மருத்துவமனை பணியாளர்கள் பாண்டியம்மாள், சந்திரா ,ஜெயராணி ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் சாய் பாபா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவியர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி