திண்டுக்கல் : ஆத்தூர் அரசு மருத்துவமனையில், மகாத்மா காந்தி, பிறந்த தினத்தை முன்னிட்டு, மருத்துவ சிறப்பு முகாம் (ஆயுஷ்மான் பவ) மற்றும் தூய்மை பணி முகாம் (ஸ்வச்சதா ஹி சேவா) நடைபெற்றது. இந்நிகழ்வை, முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் அரவிந்த் நாராயணன் தலைமையேற்று நடத்தினார். மருத்துவர்அஞ்சு, முதன்மை மருந்தாளுனர் உதயகுமார், சித்த மருத்துவ மருந்தாளுனர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சுத்தம் சார்ந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, மருத்துவமனை செவிலியர்கள், நம்பிக்கை மைய ஆற்றுனர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி