திருவள்ளூர் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகின்ற (9 -10 -2023) அன்று பள்ளிகள் திறக்கும் நிலையில் அனைத்து சமையலறர்களுக்கு தரமான உணவு மற்றும் இணையதள பதிவேற்றம் ஆப் பற்றி அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார் . இந்தக் கூட்டத்தில் காலை உணவு சமைக்கும் சமையலறர்களுக்கு தரமான உணவு இணையதள பதிவேற்றும் ஆப் காய்கறிகள் சுத்தமாக இருக்க வேண்டும், சுத்தமான குடிநீர் சமைக்கும் பொழுது சமையல் பாத்திரங்களை மூடி வைத்து சமைக்க வேண்டும் தரமான உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பரிமளா அருண்குமார், நக்கீரன், ஜெயலட்சுமி தன்ராஜ், அபூபக்கர் , ராஜன் , மற்றும் C.A.O. செல்வி பேரூராட்சி இளநிலை உதவியாளர் அன்பரசன் மேற்பார்வையாளர் கோபி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் சமையலறார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு