திண்டுக்கல் : முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் விபரங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது என, மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, தகவல் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் விபரங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் இது நாள் வரை தங்களுடைய விபரங்களை சமர்ப்பிக்காத அடையாள அட்டை பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் அனைவரும் தங்களுடைய படைப்பணிப் புத்தகம், ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை(பி.பி.ஓ.) குடும்ப உறுப்பினர்கள் விபரம், வங்கிக் கணக்கு விபரம், ஆதார் எண் ஆகிய விபரங்களுடன், மார்பளவு புகைப்படம், படை விலகல் சான்று, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை ஆகிய ஆவணங்களை குறுந்தகட்டில் (சிடி) ஸ்கேன் செய்து திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி