தமிழ்நாட்டின் 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது பொள்ளாச்சி ஏ.எஸ்.பி., ஆக இருந்த பிருந்தாவுக்கு எஸ்.பி., ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சேலம் வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு, சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி., அய்மன் ஜமாலுக்கு எஸ்.பி., ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஆவடி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சேலம் வடக்கு துணை கமிஷனர் கௌவுதம் கோயல், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரன், மதுரை, தமிழக சிறப்பு போலீஸ் 6வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும்சென்னை, ரயில்வே எஸ்.பி., ஆக சுகுணா சிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டின் உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா இ. ஆ .ப உத்தரவு பிறப்பித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி