சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது நினைவு நாளை முன்னிட்டு தொழில்துறை அமைச்சர் டி .ஆர் .பி ராஜா மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அமைச்சரை முன்னதாக திருப்புத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் திருப்புத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு முகவை மண்டல ஒருங்கிணைப்பாளர் விஜய கதிரவன், மாநில துணைச் செயலாளர் மதுரை பாலா, மாவட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் துணை அமைப்பாளர் காளிமுத்து, தி.மு.க நகர துணை செயலாளர் உதய சண்முகம், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் சண்.சீமான் சுப்பையா, நகர இளைஞரணி அமைப்பாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான பசீர் அகமது, காரை. தமிழ்நம்பி, நகர அவைத் தலைவர் இராம. ரவி, ஹரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாண்டியன், தம்பிபட்டி வைரமணி மற்றும் பலர் கலந்து கொண்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி