சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகள் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 12 ஒன்றியங்களிலும் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை (08.11.2023) அன்று திருப்பத்தூர் ஒன்றியம் ஆர்.சி எஸ்.புதூர் சிங்கம்புணரி அரசு பாத்திமா நடுநிலைப்பள்ளியிலும், (10.11.2023) அன்று மேல்நிலைப் பள்ளியிலும், (15.11.2023) அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும். (17.11.2023) அன்று திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் (22.11.2023) அன்று மானாமதுரை ஒ.வெ.செ. மேல்நிலைப்பள்ளியிலும் (24.11.2023) அன்று இளையான்குடி புதூர் ஹாஜி கே.கே இப்ராஹிம் அலி மேல்நிலைப்பள்ளியிலும் (28.11.2023) அன்று காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், (29.11.2023) அன்று தேவக்கோட்டை வார்டு நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் (30.11.2023) அன்று கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் (01.12.2023) அன்று சாக்கோட்டை பி.ஆர்.என்.சி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் (05.12.2023) அன்று கல்லல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியிலும் (06.12.2023) அன்று சிவகங்கை அரசு மேல்நிலைப்பள்ளி, மருதுபாண்டியர்நகரிலும் நடைபெற உள்ளது.
6 வதுமாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இச்சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாமில் மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை NID வழங்குதல், ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID பதிவு செய்தல், CMCHIS காப்பீட்டு அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவேற்றம் செய்ய முடியாத கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முகாமில் ஆதார் அட்டை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிறமறுவாழ்வு உதவிகள் பரிந்துரை செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை இ-சேவை பதிவேற்றம் செய்தல் போன்ற சேவைகள் வழங்கப்படும். மூலம்மேலும் ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருப்போர் தங்களது பழைய அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ளவும் இம்முகாம் உதவிகரமாக இருக்கும் புதிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல், ரேசன் அட்டை நகல், வயது சான்று அகியவைகளுடன் பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப.,அவர்கள், தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி