விருதுநகர் : ராஜபாளையம் நகராட்சியில் தெரு மாநகராட்சிகளுக்கு இணையாக சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் வசூல் செய்யப்பட்டு உள்ளது. நகராட்சியில் சுமார் 25 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. தென்காசி சாலை சேதம் அடைந்து கொண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதே போல், ராஜபாளையம் நகர் முழுவதிலும் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட அனைத்து சாலைகளும் பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. அதேபோல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதார வளாகம் ஏற்படுத்தப்படவில்லை.
பிறப்புச் சான்றிதழ் இறப்பு சான்றிதழ் சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட புரட்சியே பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை லஞ்சமாக பெறப்படுகிறது. குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் பயன்பாடு இன்றி உள்ளது. ராஜபாளையம் மாவட்ட ஆட்சியில் போர்க்கால அடிப்படையில் சாலை கழிப்பறை மழை நீர் வடிகால் வசதிகளை 45 நாட்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். தவறினால், புதிய தமிழகம் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதிலும் உள்ள நகராட்சிகள் மாநகராட்சிகள் எந்தவித அரசியல் அழுத்தங்களும் இன்றி சுயமாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி