மதுரை : மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை, தனியாருக்கு வழங்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான, மதுரை அரசரடி விளையாட்டு மைதானம், மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்தல் நினைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக்கோரி, மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசரடி ரயில்வே மைதானம் முன்பு, மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி என பலரும் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர்.இது குறித்து, மதுரை எம்.பி. வெங்கடேசன் கூறியதுஅரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மதுரை ரயில்வே மைதானம், தனியாருக்கு தாரை வார்க்க நினைத்தால், பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி