சேலம் : மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட7வது வார்டு தங்கம்புரிபட்டணத்தில் காந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இது பலகாலங்களாக சரிவர பராமரிப்பற்று கிடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டு மைதானத்தில் குப்பை கொட்டுவதற்கும், லாரி நிறுத்தும் செட்டாகவும், கார் நிறுத்தும் பார்க்கிங் போலவும் மற்றும் நாய்கள், மாடுகள் தங்குமிடமாக காந்தி விளையாட்டு மைதானம் இருந்து வந்தது . இது மேட்டூர் நகராட்சி நிர்வாகத்திற்கு பாத்திய நிலம் ஆகும். தற்பொழுது 7-வது வார்டு கவுன்சிலர் திருமதி லதா ரவி அவர்கள் இந்த மைதானம் ஏதோ ஒரு வகையில் மக்கள் மத்தியில் பயன்பாடுகள் அற்ற நிலையில் போனதை கண்டு வருந்தினார். இதற்கு ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும் என்று நினைத்த கவுன்சிலர் திருமதி லதா ரவி அவர்கள் முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டத்தின் கீழ் சீரமைப்பு செய்து பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் பயன்படும் விதமாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வரின் கனவு திட்டமான அனைத்து பகுதிகளிலும் சிறுவர், முதியவர்கள், பெண்கள், நடைபெயற்சி தளம், அமைக்க உத்தரவு வழங்கப்பட்ட பூங்காவாக மாற்றி தனது வார்டு ஊர் மக்களுக்கு புத்துணர்ச்சி செய்து புதிய விரிவு பூங்காவை சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து பாதுகாப்பு வசதிகளோடு CCTV CAMERA . மின்விளக்கு போன்ற வசதிகள் கொண்ட காந்தி விளையாட்டு பூங்கா உருவாக்க திட்டமிட்டார் .
இது சம்மந்தமாக மேட்டூர் நகராட்சி மன்றத்தில் நன்றி தீர்மானம் MTC நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நகர வார்டு சபை கூட்டத்திலும் எதிர்ப்பின்றி அனைத்து மக்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேட்டூர் நகரமன்ற கூட்டத்திலும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அந்த பணிக்கு ஒப்பந்தமும் முடிவு செய்யப்பட்டது. அந்த ஒப்பந்ததாரரும் பணிக்கு காந்தி விளையாட்டு மைதானத்தில் பூஜை போடப்பட்ட நிலையில் ஒரு சிலரின் சுயநலத்திற்காக அவர்களின் தூண்டுதலால் அந்த ஆக்கிரமிப்பாளர்கள் காந்தி விளையாட்டு பூங்கா தேவையில்லை என்றும், கோயில் விஷேச நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும் என்றும், தங்களது சுயலாபத்திற்காக கோயிலை நிலத்திற்கு அழைப்பதாக தெரிய வருகிறது. ஊரில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் நிகழ்ச்சி நடத்த அந்த கோயில் பகுதிகளில் உள்ள திடல்கள் உள்ளன. என்பதை பொதுமக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை முனவைத்து கையொப்பம்
பெற்று ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும்
என்ற சுயநலத்திற்காக இடையூறு செய்து வந்ததும் நல்லதோர் திட்டம் நடைபெற கூடாது தங்களுக்கு இந்த மைதானம் வாகனம் , கால்நடை போன்ற தேவைக்கு வேண்டும் என்று சிலர் மைதானம் கட்ட கூடாது என்று நீதிமன்றத்திற்கு சென்று இடைக்கால தடை உத்தரவு வாங்கினார்கள். முதல்வரின் கனவு திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் கவுன்சிலர் திருமதி லதா ரவி அவர்கள், ஊர் பொதுமக்களின் பெறும் ஆதரவோடும் ஒத்துழைப்புடனும் நீதிமன்றத்திற்கு சென்று இடைக்கால தடையை உடைத்து முதல்வரின் கனவு திட்டத்தை நிறைவேற்றினார் .
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.T. லாரன்ஸ்