ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுக்கா கருமாண்டி செல்லிபாளையம் ஊராட்சி பாரதி நகரில் ஏறத்தாழ 50ற்கு மேற்பட்டதான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் இருக்கின்ற வீட்டிற்கு அருகாமையிலே குளம் இருக்கிறது. அந்த குளத்தில் இருந்து தண்ணீர் அதிகமாய் வெளியேறுவதினாலே, அங்கு இருக்கின்ற ஜனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் மற்றும் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்திலும் புகார் அளித்துள்ளனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளோடு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருதாகவும், இந்த தண்ணீர் மூலமாக நிறைய கொசுக்கள் மற்றும் தொற்று வியாதிகள் அதிகம் பரவுகின்றன என்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதை தமிழக அரசின் உடைய கவனத்திற்கு கொண்டு சென்று, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய மு. க ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்திலே தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் படியாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜெ.கோபாலகிருஷ்ணன்