திருவள்ளூர் : முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீஞ்சூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் ஆணைக்கிணங்க திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் துரை சந்திரசேகர் ஆலோசனைப்படி மீஞ்சூர் நகர தலைவர் கா.அரவிந்த் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ் வல்லூர் நந்தகுமார் நந்தியம் சக்கரவர்த்தி கொண்டக்கரை ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் மீஞ்சூர் பஜாரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர்கள் அன்பரசு சுகுமார் கே.ஜி.என். முகமது அல்தாப் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் லட்சுமி காந்தன் ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் முஹம்மது தாரி, மாவட்ட செயலாளர் அவர்கள். சித்திக் பாஷா, நாலூர் சிலம்பரசன், நெய்த வாயல் வினோத், சீமாபுரம் சதீஷ், மீஞ்சூர் காமராஜ், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் எத்திராஜன், வெங்கடேசன், மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் நகர கமிட்டி சார்பாக முக்கிய தீர்மானமாக நான் மீஞ்சூர் பஜாரில் இருந்த நேரு சிலை சாலை விரிவாக்க பணிகளால் அகற்றப்பட்டது. மீண்டும் பஜார் வீதியில் முழு உருவ சிலையை நிறுவ வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு