சிவகங்கை : பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டையை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டதை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த் அவர்களிடம் வழங்கினார் .சிவகங்கை நவ19_சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலக பத்திரிகையாளர் அடையாள அட்டையை கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பெரியகருப்பன் வழங்குவதை திருமிகு சிவகங்கை நகர் மன்ற தலைவர் பருந்துபார்வை இதழ் ஆசிரியருமான திருமிகு.சிஎம் துரைஆனந்த் பெற்றுக் கொண்ட நிகழ்வு சிவகங்கையில் நடந்தது .சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தமிழக செய்தித்துறை சார்பில் அடையாள அட்டை வழங்கிய மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், செய்தி மக்கள் தொடர்புத் துறை மாவட்ட அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராஜசெல்வன் ஆகியோர்களுக்கு சிவகங்கை மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். என சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி