தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் தொடர் படுகொலைகளை கண்டித்தும், படுகொலைகளை இரும்பு கரம் கொண்ட தடுத்து நிறுத்த மறக்கும் தமிழக அரசை கண்டித்தும், தொடர் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவசம்பு இணை செயலாளர் விஜய் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.T. லாரன்ஸ்