மதுரை : வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மதுரை மாவட்டம் ஆத்திகுளம் திட்டப்பகுதி-ல் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320 அடுக்குமாடி குடியிருப்புக்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள் . அதனைத் தொடர்ந்து, மதுரை ஆத்திக்குளம் அடுக்குமாடி குடியிருப்பில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஆனணயினை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மண்டலத்தலைவர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி