• About
  • Contact
Sunday, June 8, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home

மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

admin by admin
November 23, 2023
in Latest News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (22.11.2023) ”மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முன்னோடி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பார்வையிட்டு தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, அனைத்து பகுதிகளிலும் அரசு அலுவலர்களை கொண்டு நேரடியாக மனுக்களைப்பெற்று ,தகுதியுடைய மனுக்கள் மீது  உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில், மக்கள் தொடர்பு முகாம் போன்றவைகளை நடத்துவது மட்டுமன்றி, பிரதி திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் வாயிலாகவும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவை ஏற்படுத்தி அதன் வாயிலாகவும், குறிப்பாக முதல்வரின் முகவரி ஆகியவைகளின் மூலம் மனுக்களைப் பெற்று தகுதியுடைய நபர்களுக்கு உரிய பயன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் புதிய திட்டமான “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என, மொத்தம் 13 துறைகள் இதில் பங்கேற்கவுள்ளன. இத்துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஏதுவாக இம்முகாமினை நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 7 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 4 பிற நகர் பகுதிகளில் (22.11.2023) மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெறுகிறது. 


அதில், சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் திருப்பத்துார் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியில், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் காலை 09.00 மணியளவில் தொடங்கப்பட்டு பிற்பகல் 02.30 மணி வரை  நடைபெற்றது. இதில், மேற்கண்ட துறைகள் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு ஏதுவாக, அனைத்து ஏற்பாடுகளும்  சம்மந்தப்பட்ட துறைகள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பல்வேறு துறைகள் பங்கேற்றுள்ள “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமின் வாயிலாக மொத்தம் 944 மனுக்கள் இன்றைய தினம் பெறப்பட்டுள்ளது. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய பலன்கள் வழங்கப்படும். இதுபோன்று, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மனுக்களை அளித்து, தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, தனித்துணை ஆட்சியர் (பொ) ஜி.சரவணப்பெருமாள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)
ராஜா திருப்பத்தூர் வட்டாட்சியர் ஆனந்த், திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Sivagangai
Previous Post

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப்போட்டி

Next Post

தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா

admin

admin

Next Post

தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

June 8, 2025
குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.