சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டுத்தலை வாசல் பள்ளிவாசலில் சிவகங்கை மாவட்ட ஜமாத்துல் உலாமா சபை சார்பில் தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ரூ 3, லட்சம் மதிப்பிலான பொருட்கள் நேரடியாக சென்றடையும் வகையில் லாரி மூலம் அனுப்பி வைத்தனர். மாவட்டத் தலைவர் அல்ஹாஜ் முகமது இப்ராஹீம் பை ஜி, மாவட்ட செயலாளர் அல்ஹாபில் முகமது பத்ருத்தீன் யூசுஃபி. மாவட்ட பொருளாளர் சேக் முகமது அருசி மற்றும் காட்டு தலைவாசல் ஜமாத் தலைவர் புகாரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி