சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் அட்வான்ஸ்டு லேப்ராஸ் கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்யாமலேயே நுண்துளை தொழில் நுட்பத்தின் வாயிலாக, கத்தியின்றி, ரத்தமின்றி, தழும்பின்றி (17). வயது சிறுமிக்கு, வயிற்றில் 7 கிலோ அளவுள்ள சினைப்பை நீர்க்கட்டியை மருத்துவமனை சிறப்பு மருத்துவர் டாக்டர் அருண்மொழி விஜய் தலைமையில் மருத்துவ குழுவினர் அகற்றி உள்ளனர். இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் குமரேசன் கூறியதாவது காரைக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த (17). வயதுடைய சிறுமி கடந்த 6 மாதமாக வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்தால் அவதிப்பட்டு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லை.
இந்தநிலையில் கடும் வயிற்று வலியில் துடிதுடித்த நிலையில் அந்த சிறுமி நேற்று இரவு குளோபல் மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் சினைப்பை நீர்க்கட்டி பெரிய அளவில் 7 கிலோ இருப்பதை உறுதி செய்தோம். உடனடியாக மருத்துவமனை – அட்வான்ஸ்டு லேப்ராஸ் கோப்பி சிறப்பு மருத்துவர் அழைக்கப்பட்டு பரிசோதித்து அவர் ஆலோசனையின் படி கத்தியின்றி, ரத்தமின்றி, தழும்பின்றி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக 7 கிலோ நீர்க கட்டியை அகற்றினோம். இப்போது சிறுமி நலமாக உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி