சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மஹாலில் வருவாய்த்துறை துறை, நகர்ப்புற வளர்ச்சிதுறை, கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற 19 துறைகள் சார்பில் நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற சேர்மன் கே .பி .எஸ் பழனியப்பன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் துணை சேர்மன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். பேரூராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில் இருந்தும் மனுக்களாக பெறப்பட்ட பயனாளர்களுக்கு 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் அதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இம்முகாமில் கூடுதலாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி நெற்குப்பை ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர்களால் சிறப்பு மருத்துவ முகாமும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்காக அவர்கள் சென்று வர அவர்களுக்கானவாகன ஏற்பாடும், முகாம் குறித்த ஆலோசனை குழுக்களும் அமைக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற முகாமில் 244 மனுக்கள் பெறப்பட்டது.
குறிப்பாக பேரூராட்சி மற்றும் மின்துறை சார்பில் பெறப்பட்ட மக்களுக்கு உடனடியாக தீர்வும் காணப்பட்டது. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதா பேகம், திருப்பத்தூர் வட்டாட்சியர் கண்ணதாசன் (பொறுப்பு) மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, இளநிலை உதவியாளர் சேரலாதன், காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன், சார்பு ஆய்வாளர் மாணிக்கம், வருவாய் ஆய்வாளர் உண்ணாமலை,கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், உதவியாளர் முகமது அலி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் என பலரும் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி