மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் பிரிட்டானியா நியூட்ரிஷன் ஃபவுண்டேஷன் ஆனது ஊட்டச்சத்து குறைபாடு நீக்குவதற்காக பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக 34 அரசு உயர்நிலை நடுநிலை மேல்நிலை மற்றும் ஆரம்ப நிலைப் பள்ளிகளுக்கு பல்வேறு வகையான விளையாட்டு சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஹாக்கி மட்டைகள் , ஹாக்கி பந்துகள், இறகு பந்துகள், கையுந்து பந்துகள், கால்பந்துகள், துரோ பால், ஸ்கிப்பிங் ரோப்புகள் போன்ற பல்வேறு வகையான விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டன. பாண்டியராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஹாக்கி மட்டைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சக்தி ராஜன், அமுதஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் பி.ஜி. ராஜா வரவேற்றார். இதில், திட்ட அலுவலர் ரஞ்சிதா விளையாட்டு சாதனங்களை மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். இதில், களப்
பணியாளர்கள் ஆனந்த் , பானுப்ரியா ,தேவிப்ரியா , வாஞ்சிநாதன்,
ஜஹின், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி