மதுரை : பொதுமக்களின் நலன் கருதி சாலை அமைக்கும் பணியை தொடங்கிய மதுரை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள். ஜனவரி 3தேதி 88 வது வார்டு நம்பர் மதுரை மாவட்டத்தில் உள்ள கங்கா நகர், பகுதியில் உள்ள சரவணன் நகர் மெயின் ரோடு, மற்றும் மாருதி நகர் மெயின் ரோடு, உள்பட இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறன. இந்த பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்பாடு செய்த கொடுத்த மதிப்புக்குரிய. மண்டல தலைவர் அவர்களுக்கும் மதிப்புக்குரிய உதவி ஆணையாளர் அவர்களுக்கும் . 88 எட்டாவது வார்டு மதுரை மாநகராட்சி இளநிலை பொறியாளர் திரு. மாரியப்பன் அவர்களுக்கும். கங்கா நகர் பொதுமக்கள் சார்பாக நன்றியை பதிவிட்டு கொண்டனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான பாதாளை சாக்கடையை அமைத்துவிட்டு பிறகு ரோடு பணியை துவங்கி இருந்தால் அரசு பணம் வீணாவதை தடுத்திருக்க முடியும் என்று ஒரு சில சமூக ஆர்வலர்கள். மற்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முனியாண்டி