சிவகங்கை : தேவகோட்டையில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவகோட்டை நகர் பகுதிகளில் (கடை எண் 2,4,10,11) உள்ளிட்ட அமுதம் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு1000 ரூபாய் , கரும்பு வேட்டி சேலை உள்ளிட்ட பரிசு தொகுப்பை தொடங்கி வைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் தனலட்சுமி நல்லு பாண்டி, கோமதி பெரிய கருப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி