சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவகோட்டை அருகில் கண்ணங்குடி ஊராட்சி, கண்ணங்குடி கிராமத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் வீடு முற்றிலும் எரிந்து பொருட்கள் அனைத்தும் சேதமானது, அதனை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.மாங்குடி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் தேவையான உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். உடன் மாவட்ட துணைத் தலைவர் அப்பச்சி சபாபதி அவர்கள் மற்றும் தேவகோட்டை நகர காங்கிரஸ் சஞ்சய் காந்தி மற்றும் முத்துக்குமார் மற்றும் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி