மதுரை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை, தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள், மதுரை சூர்யா நகர் பகுதியில், உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி உடன் உள்ளார். மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஜனவரி 21 தேதி நடைப்பெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைப்பெற உள்ளன. போட்டிகள் நடைப்பெறுதவற்கான முன்னேற்பாடு பணிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார் .
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி