சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், ” மக்களுடன் முதல்வர்” புதிய திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக, மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்புப் பணி அலுவலர் / நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குநர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.மோகனச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி கு.சுகிதா (சிவகங்கை), திரு.சோ.பால்துரை (தேவகோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.வீரராகவன், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி