புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் காலை 6:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அமைதியான முறையில் ஆராதனை நடைபெற்றது, மற்றும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது பேசப்பட்ட ஏழு வார்த்தைகளைப் பற்றிய மறையுறைகள் நடந்தது – தொடர்ந்து மாலை 4.30 மணிக்குசிலுவை பாதை ஜெப வழிபாடுகள் நடைபெற்றன. ஜெப வழிபாட்டின் போது 12ம் ஸ்தலத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றும் வகையில் சிலுவையின் மீது வெண் துணி போர்த்தினார்கள்,
மதுரையில் உள்ள கீழவாசல் தூய மரியன்னை பேராலயம், ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம், புதூர்லூர்து அன்னை ஆலயம், அஞ்சல் நகர் இடைவிடாசகாய அன்னை ஆலயம், ரயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஆராதனைகள் சிலுவைப்பாத ஜெப வழிபாடுகள் நடைபெற்றன. மற்றும் நரிமேடு கதீட்ரல் சிஎஸ்ஐ தேவாலயம், புதிய ஜீவிய சபை உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் நேற்று பகல் முழுவதும் ஏழு வார்த்தை குறித்து மறையுறைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று இரவு அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டு நாளை நள்ளிரவு ஈஸ்டர் நாட பெறும் இத்தோடு கிறிஸ்தவர்களின் தவக்காலம் நிறைவு பெறுகிறது..
புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை ஜெப வழிபாட்டின் போது சிலுவையின் மீது வெண் துணி போர்த்தி கிறிஸ்தவர்கள் தங்கள் கேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். பங்குத்தந்தை ஜோசப் அருகில் உள்னார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஆண்டனி வினோத்