திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. இதில் அனைத்து மின் வாரிய செயற் பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள கலைக்குழுவினர் பங்கேற்று சிறப்பித்து பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்தனர். ஆதித்தமிழர் கலைக் குழுவினர் பாரம்பரிய தப்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
பின்னர் அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது இதில் பா கதிரேசன் வடக்கு திட்ட தலைவர் சி .ஐ. டி உதவி செயற் பொறியாளர்கள் பன்னீர்செல்வம் சிவசங்கரன் பெருமாள் ஷீலா ஸ்ரீதர் வெங்கடேசன் கன்னியப்பன் மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் அம்பேத்கர் பணியாளர் பொறியாளர் சங்கம் கோடீஸ்வரன் வெங்கடேசன் பார்த்திபன் காமராசு எல்லப்பன் குமார் அருள்நாதன் ஜீவா உள்ளிட்ட மின்வாரிய முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு