• About
  • Contact
Monday, June 30, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

சதுரகிரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி

admin by admin
January 19, 2023
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்குவார்கள். நாளை, தை மாத தேய்பிறை பிரதோஷம் நாளில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை தேய்பிறை பிரதோஷம், வரும் 21ம் தேதி (சனி கிழமை) தை அமாவாசை என நாளை முதல், வரும் 22ம் தேதி (ஞாயிறு கிழமை) வரை 4 நாட்கள் பக்தர்கள், சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தை அமாவாசையன்று முன்னோர்கள் ஆன்மா சாந்தி பெறுவதற்காக, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சித்தர்கள் வாழும் புண்ணிய மலை என்று, ஏராளமான பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், தை அமாவாசையன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனி கிழமையன்று அமாவாசை வருவதால், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பக்தர்களின் வருகையை எதிர்பார்த்து, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai
Previous Post

இல்லத்திற்கு நேரடியாக சென்று 3 லட்சம் நிவாரண தொகை

Next Post

தெய்வீக தன்மையுடைய பஞ்சவாடி மரங்கள் நடும் நிகழ்ச்சி

admin

admin

Next Post

தெய்வீக தன்மையுடைய பஞ்சவாடி மரங்கள் நடும் நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

திமுக பொதுக் கூட்டம்

திமுக பொதுக் கூட்டம்

June 27, 2025

மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

June 27, 2025
புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா

புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா

June 27, 2025
புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

June 26, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.