மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரி அலுவலர்களுடன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு கே என் நேரு, மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு இ பெரியசாமி, மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு ஏ வா வேலு ,மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம் ஆர் கே பன்னீர் செல்வம், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி கே எஸ் மஸ்தான், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு சி வி கணேசன், தலைமை செயலாளர் முனைவர் இறையன்பு, IAS அரசுத்துறை செயலாளர்கள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.